சுலைமான் றாபி-
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (18) நிந்தவூரில் இடம்பெற்றது.
இதில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் Dr எ.எல் அலாவுதீன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr எம். ஹம்மாம், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி Dr பைரூசா நக்பர், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.


