இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு..!

ந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா தெரிவித்துள்ள கருத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா கொழும்பு- தூத்துக்குடி மற்றும் கொழும்பு – கொச்சி ஆகிய இடங்களுக்கு கப்பல் சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளார். அத்துடன் திருகோணமலை- இராமேஸ்வரம் ஆகியவற்றுக்கான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது சம்மந்தமாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்,

திருகோணமலையில் இருந்து கப்பல் சேவை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் அதனை திருகோணமலைக்கும் ஆரம்பிக்க வேண்டும். திருகோணமலையில் இருக்கும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைத்து திருகோணமலையில் இருந்து இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகின்ற விமானங்களுக்கு இடமளிக்கலாம். அத்துடன் விமான நிலையம் ஒன்று செய்து முடிக்க பெரும் நிதிகள் செலவு செய்யப்படவேண்டியுள்ளது. என்பதனை விட திருகோணமலை விமான நிலையத்தில் ஓடுபாதையினை சரியாகச் சீர் செய்து, சுங்கத்திணைக்களம், மற்றும் இதர செயற்பாடுகளுக்கான முக்கிய கட்டடங்களை மாத்திரம் முதலில் கட்டி சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பது இன்றைய கட்டாயத்தேவையாக இருக்கிறது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -