ஐ.பி.எல். கிண்ணம் கல்முனை ஜிம்ஹானா வசமானது ! இம்றான் அணிக்கு இரண்டாமிடம் !

 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ், சுலைமான் றாபி -


நி
ந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகம் வருடம் தோறும் நடாத்தும் 20 க்கு இருபது கடினபந்து சுற்றுப்போட்டியின் 2015ம் வருடத்திற்கான Imran Premier Leaque ஐபிஎல்.சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (26.09.2015) சனிக்கிழமை. நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் இம்றான் மற்றும் கல்முனை ஜிம்ஹானா ஆகிய இரண்டு அணிகள் தெரிவாகின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இம்றான் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்ஹானா அணி 20 ஒவர்கள் நிறைவடைவில் 05 விக்கெட் இழப்பிற்கு


177 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அவ்வணி சார்பாக றசான் 58 ஓட்டங்களையும், ஜப்றான் 41


ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இம்றான் அணி சார்பாக அத்ஹர் 04 ஓவர்கள்


பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு 01 விக்கட்டினையும், சலாம் 02 ஓவர்கள் பந்து வீசி 17


ஓட்டங்களுக்கு 01 விக்கட்டினையும் வீழ்த்தினர்.


178 எனும் வெற்றி இலக்கினை எட்டுவதற்கு துருப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்றான் அணி


16.1 பந்து வீச்சு ஓவரில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் அவ்வணி


சார்பாக பாரி 56 ஓட்டங்களையும், நிக்க்ஷி அஹமட் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து


வீச்சில் ஜிம்ஹானா அணி சார்பாக றசான் 03 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 04


விக்கட்டினையும், றிபாட் 02 ஓவர்கள் பந்து வீசி 01 ஓட்டத்திற்கு 02 விக்கட்டுகளை


வீழ்த்தினார். இறுதியில் மேலதிக 47 ஓட்டங்களால் கல்முனை ஜிம்ஹானா அணி வெற்றி


பெற்று சம்பியனானது.


இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக ஜிம்ஹானா அணியின் தலைவர் றசான் தெரிவு


செய்யப்பட்டதோடு, இச்சுற்றுத்தொடரின் சிறப்பாட்டகாரராக நிந்தவூர் இம்றான்


அணியின் வீரர் நிக்ஷி அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.


நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம்


தலைமையில் இடம்பெற்ற இவ்விறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக சுகாதாரப் பிரதியமைச்சர்


பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எம். ஜௌபர், விளையாட்டு


உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,


விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இறுதியில் வெற்றிபெற்ற அணிக்கு 30,000 ரூபாவும், வெற்றிக்கோப்பையும்,


தோல்வியுற்ற அணிக்கு 15,000 ரூபாவும், வெற்றிக்கோப்பையும் வழங்கி


வைக்கப்பட்டதோடு பிரதியமைச்சர் அவர்களிற்கு பொன்னாடை போர்த்தியும், ஞாபகச்சின்னம்

வழங்கியும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -