மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா, இது தொடர்பாக வாரஇறுதி பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களுடன் இருப்பதாகவும், தமது அணி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சியில் கூடுதல் உறுப்பினர்களைக் கொண்ட அணி என்ற வகையில் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரப் போவதாகவும் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த புதன்கிழமை வரை தமது அணியில் இருந்த ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரி தரப்புடன் இணைந்து விட்டதாக தெரிவித்துள்ள ரஞ்சித், எதிர்வரும் நாட்களிலும் அவ்வாறான அணி தாவல்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே ராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்கள் முடிவடைந்த பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றும் தமது போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
