சிரியாவில், ரஷ்யா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருவதற்கு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அதிருப்தியினையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா, சிரியாவிற்கு அதிக அளவிலான நவீன யுத்த தளபாடங்களையும், இராணுவ ஆலோசக நிபுணர்களையும் அனுப்பி வருவதாக அமெரிக்க “நியூயோர்க் ரைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர, சிரியாவில் உள்ள இராணுவ வாநூர்தி தளத்தின் நிலையங்களில், ரஷ்ய கட்டுப்பாட்டு நிலையங்களும் ஸ்தாபிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான நடவடிக்கைகள் மூலம் சிரியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் கட்டுக்கடங்காத அளவில் விஸ்தரிக்கக்கூடும் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர், ரஷ்ய ராஜாங்க செயலாளர் சேர்ஜி லவ்ரோவை எச்சரித்துள்ளார்.
சிரியாவில் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெறும் உள்நாட்டு யுத்தத்திற்கு ரஷ்யா, சிரியாவிற்கு பல வழிகளில் உதவி வருவதாகவம் அந்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
