அரசியல் அமைப்பு பேரவையின், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடையேயான இணக்கப்பாட்டின் கீழ் நியமிக்கப்படும் இரு உறுப்பினர்களில் ஒருவராக ஜே.வி.பி.இன் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் விஜயதாச ராஜபக்ஸ ஏற்கனவே பிரதமரின் பிரதிநிதியாக நிமியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி இவற்றுக்கு அனுமதியை வழங்க வேண்டும்.
தேசிய அரசாங்கத்தின் கீழ் முதலாவது அரசியலமைப்பு சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய ,எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ , பாட்டளி சம்பிக்க ரணவக்க, டபியுஸ்யூ. டி.ஜே. செனவிரத்ன ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியை சேர்ந்த உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் உள்ளதால் அதற்கு நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
