சகல சிறுவர்களுக்கும் கல்விக்காக சம வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தபால் தலை ஒன்றும் வெயிடப்பட்டது.
இதன் முதற்பிரதியை கல்வி அமைச்சர் அகில விராஸ் காரியவம்சம் பெற்றுக்கொண்டார். அத்துடன், பல்வேறு கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது
