ஜம்மியத்துல் உலமா சபையின் பணியகத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்...!

நிஸ்மி, அக்கரைப்பற்று-

க்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய பணியகத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் ஹஜ்ஜுப் பெருநாள் தினமான இன்று (24) வியாழக்கிழமை பிற்பகல் அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம் பெற்றது.

அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும், அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அரபிக் கல்லூரியின் அதிபருமான மௌலவி  அஷ்-ஷேய்க் எம்.ஏ.அப்துல் லெத்தீப் (பஹ்ஜி) தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் முன்னாள் பொது சனத் தொடர்பு உத்தியோகத்தருமான எஸ்.எம்.ஸபீஸ், ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரும், அபூபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி எம்.எம்.கலாமுதீன்(ரஷாதி), பொதுச் செயலாளரும் அக்கரைப்பற்று கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகருமான மௌலவி அஷ்-ஷேய்க் ஏ.ஆர்.ஏ.மனாப் (ஷர்க்கி) உட்பட உலமா சபையின் உறுப்பினர்களான உலமாக்கள் எல்லோரும் இணைந்து ஒரு வெள்ளைச் சீலையில் கற்களை வைத்துக் கொடுக்க

அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும், அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அரபிக் கல்லூரியின் அதிபருமான மௌலவி அஷ்-ஷேய்க் எம்.ஏ.அப்துல் லெத்தீப் (பஹ்ஜி) முதல் கல்லை வைத்தார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் முன்னாள் பொது சனத் தொடர்பு உத்தியோகத்தருமான எஸ்.எம்.ஸபீஸ், ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரும், அபூபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி எம்.எம்.கலாமுதீன்(ரஷாதி), பொதுச் செயலாளரும் அக்கரைப்பற்று கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகருமான மௌலவி அஷ்-ஷேய்க் ஏ.ஆர்.ஏ.மனாப் (ஷர்க்கி) உட்பட கலந்து கொண்ட உலமாக்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சட்டத்தரணி, வர்த்தகப் பிரமுகர்கள் முதலியோர் கற்களை நட்டு வைத்தனர்.

அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் சிரேஷ்ட உறுப்பினர் மௌலவி எம்.எம்.உதுமா லெவ்வையின் துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஏ.அப்துல் லெத்தீப் (பஹ்ஜி) தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தலைவர் உப தலைவர் மற்றும் புளட்ஸ் கழகத்தின் சாரிபில் ஆசிரியர் எம்.எம்.நிஸாம் ஆகியோரின் சிறப்பரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவுற்றது.

அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய பணியகத்தினை  அமைப்பதற்கான இடத்தினை அக்கரைப்பற்று புளட்ஸ் கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -