மதவிதிப் பிரகாரம் - நான்கு திருமணங்கள் செய்ய முடியும் : அசாத் சாலி

தவிதிப் பிரகாரம் எனக்கு மூன்று அல்ல நான்கு திருமணங்கள் செய்ய முடியும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அதிகாரத்ததைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ நான் யாரையும் பலவந்தமாக வீட்டில் கொண்டுவந்து வைத்திருக்கவில்லை. எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால் மதவிதிப் பிரகாரம் மூன்று அல்ல நான்கு திருமணங்கள் செய்யலாம். எந்தவித பிரச்சனையும் இல்லை. உவைஸின் மனைவியை விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். குறித்த விசாரணை இரண்டு கட்டங்களை அடைந்து எதிர்வரும் முதலாம் திகதி தீர்ப்பு வெளிவரவுள்ளது.

அந்த நிலையில் அவர் அசாத் சாலி உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றால் எனக்கு அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நான் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றேன். இதனை ஊடகங்களுக்கும் தெரிவிப்பதில் விரும்பமடைகின்றேன்.

உவைஸின் மனைவி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தன்னுடைய முடிவின் பிரகாரம் தான் செயற்படுவதாகவும் யாரும் தன்னை பலவந்தப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுமாறும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -