ஹஸனியா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி...!

எம்.ரி.எம்.அஸாம்-

புதிய கல்வி ஆண்டிட்கு திஹாரிய ஹஸனியா அரபுக் கல்லூரி ஹிப்ழு மற்றும் கிதாபுப் பிரிவில் புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2015.09.13 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

கிதாபுப் பிரிவுக்கு சேர விரும்பும் மாணவர்கள் தரம் 9 சித்தியடைந்திருப்பதோடு குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும், சன்மார்க்க கல்வியில் ஆசை ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அத்தோடு ஹிப்ழுப் பிரிவுக்கு சேருவதாயின் 11 அல்லது 12 வயதுடையவராக இருப்பதோடு குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும், சன்மார்க்க கல்வியில் ஆசை ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

இம்மாணவர்கள் க.பெ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தயார் படுத்தப் படுவதோடு அல் ஆலிம் பரீட்சைக்கும் தயார் படுத்தப் படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகைமைகளையுடைய மாணவர்கள் 0332296882 - 0773735494 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக முன் கூட்டியே தமது பெயர்களைப் பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 
நேர்முகப் பரீட்சை எதிர்வரம் 13 ஆம் திகதி, 
ஞாயிற்க்கிமை காலை 9 மணிக்கு, 
இல 500 B/1 மின்ஹத் மாவத்தை, 
திகாரியவில் அமைந்துள்ள ஹஸனியா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -