தேசியப் பட்டியல் நஸீருக்கு வழங்குவதே மிகப் பொருத்தமாகும் - அல் மீஸான்

பி. முஹாஜிரீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியல் பாரளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தற்போது மக்கள் செல்வாக்குள்ள, கட்சிக்காக உழகை;கின்ற மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்குவதே மிகப் பொருத்தமாகும் என கட்டாரில் இயங்கும் அல் மீஸான் சமூகசேவை அமைப்பின் தலைவர் எஸ்.ரி.எம். ஹ_தைப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுமார் 30 வருடங்களாக ஒரு பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து நிற்கின்ற அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு இம்முறை தேசியப் பட்டியல் மூலமாக ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு முன்வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இப்பிரதேச மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

வழங்கப்படவுள்ள இப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பிரதேச மக்களின் அபிலாஷைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக அமைய வேண்டும் என்பதில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இதனால் இந்நியமனத்தை மக்கள் பிரதிநிதியாக செயற்படுகின்ற மாகாண சபை உறப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்குவதே சிறந்த முடிவாக அமையும். இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளையும், இப்பிரதேசத்திலுள்ள Nதுவைகளையும் நன்கறிந்து மாகாண சபை உறுப்பிர் பதவி மூலம் பெரும் சேவையாற்றி வரும் நஸீர் அவர்களை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவருக்கு வழங்குவதன் மூலமே இப்பிரதேச மக்களின் குறைகள் தீர்க்கப்படுNமு தவிர ஏனையவர்களுக்கு வழங்கப்படுகின்ற பிரதிநிதித்துவம் தனிப்பட்டவர்களை திருப்திப்படுத்துவதற்கும் அவர்களை அலங்கரிப்பதற்கும் மட்டுமே உதவுவதாக அமையும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள மிக முக்கிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காஸிம் ஆகியோருக்கும் அல் மீஸான் அமைப்பு சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -