ரஸீன் ரஸ்மின்-
ஆசியாவின் ஆச்சரியமான நாடான இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு தேசிய அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இந்த மாற்றங்களுடன் நாடு நல்ல நிலைக்கு செல்லவேண்டும்; என்பதே நல்லாட்சியை விரும்புகின்ற மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும். இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டணியில் உருவான தேசிய அரசாங்கம் நிச்சமாக நிறைவேற்றிக்கொடுக்கும் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
தேசிய அரசாங்கத்தில் எப்படி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதோ அதுபோல வன்னி அரசியலிலும் மாற்றங்களை காணவேண்டும் என்பதே வன்னி மக்களின் அதுவும் 1990ஆம் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.
1990ஆம் ஆண்டுக்கு முன்னர் வன்னி மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மகக்ளின் உறவு எப்படி இருந்ததோ அதுபோல அந்த உறவு இப்போதும் தொடர வேண்டும் என்பதே வன்னியில் வாழும் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த காலங்களில் வன்னி மாவட்டத்தில் அரசியல் ரீதியான பலர் முரண்பாடுகளை கொண்டிருந்த போதிலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் இனவாதக்கருத்துக்களைச் சொல்லி பிரதேச ரீதியாக, மாவட்டரீதியாக மக்களை குழப்பி தமிழ்-முஸ்லிம் மக்களின் நல்லுறவில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருசில தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வந்தனர்.
வன்னி முஸ்லிம் மக்கள் சார்பில் கடந்த பத்து வருடங்களாக அமைச்சரவை அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், பக்கச்சார்பாக நடந்துகொள்கிறார், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் சேவை செய்கிறார் என்றெல்லாம் கூறி அமைச்சரின் செயற்பாடுகளை முடக்குவதற்கு பகிரங்கமாகவே செயற்பட்டனர்.
அண்மையில் இடம்பெற்ற அரச தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படிக் கூறினார்.
'கடந்த காலங்களில் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதீனின் செயற்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டது. அவர் வன்னி மாவட்டத்தில் சமமான அபிவிருத்திகளை முன்னெடுக்கவில்லை. அதனால்தான் அவருக்கும், எங்களுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டது'என்றார்.
கடந்த மூன்று சதாப்தகாலமாக தமது சொந்த மண்ணில் மிள்குடியேற முடியாமல் இருக்கின்ற முஸ்லிம்களை முதலில் சொந்த மண்ணில் மீள்குடியேற்றாமல் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் இருந்து ஓமந்தை ஊடாக வவுனியா மெனிக்பாமுக்கு சென்ற தமிழ் மக்களை ஒரு குறுகிய காலத்திற்குள் அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திய அமைச்சர் ரிசாத் எப்படி சமமாக செயற்பட்டிருக்க முடியும்.
அபிவிருத்திகள், தொழில்வாய்ப்புக்கள் என்று வருகின்ற போது வகிதாசார அடிப்படையில் வளங்களை பகிர்ந்தளிக்கப்படுகிறது. மக்களும், மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கும் அதுபற்றி நன்கு nதிரியும். ஆனாலும் தமது சுயநல அரசியல் செற்பாடுகளுக்காக அர்த்தமற்ற முறையில் கருத்துக்களைச் சொல்லி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு உண்மைகளை அறிந்துகொண்டுள்ள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிறைய தேவைகள் இருக்கிறது என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்கு நிறையத் தேவைகள் இருக்கிறது என்பதை தமிழ் மக்களும் நன்குதான் புரிந்துவைத்திருக்கிறார்கள். அதன்படி புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு சமூகங்களைச் சார்ந்த மக்கள் நன்கு புரிந்துணர்வுடன் செயற்படும் போது அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது அரசியல் பிழைப்புகளுக்காக இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்று மேடைகளில் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. மேடைகளில் மாத்திரம் தாங்கள் வெளிப்படையாக முரண்படுவதாக காட்டிக்கொள்கின்ற கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் மறைமுகமாக நல்லுறவை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதையும் மக்கள் அறியாமல் இல்லை.
எனவே, இதுவரை காலமும் நடந்த எல்லா சம்பவங்களையும் மறந்து, மன்னித்து இந்த நல்லாட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன், தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், சுசுதந்திரக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வவுனியா மாவட்டத்தில் தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
கடந்த காலங்களில் வன்னி மாவட்டத்தில் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருசில வருடங்கள் ஒற்றுமையாக செயற்பட்டு பின்னர் ஏதோ ஒரு கருத்து முரண்பாடுகளுக்காக அமைச்சருடன் இருந்து பிரிந்து சென்று தனியாக செயற்பட ஆரம்பித்ததும், அதன்பின்னர் வன்னியில் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் அறிந்தூன் இருப்பீர்கள்.
எனவே, மாற்றுக்கட்சிகளிடையே தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்கள் தெரிவான இருகட்சிகளும் தற்போது தேசிய அரசாங்கம் என்ற குடையின் கீழ் ஒற்றுமைப்பட்டுள்ளன. அதுபோல வன்னியில் தெரிவான இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.
வுன்னி மாவட்டத்தில் இருந்து 90ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்;கள் தமது சொந்த மண்ணில் வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள். ஆனால் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கு காணி, வீடு என்பன பெரும் குiறாபாடகவே இருக்கிறது.
குடந்த காலங்களில் வன்னி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் குடும்பங்களுக்கு பொறுத்தமான இடத்தில் அரச காணிகளை பகிர்ந்திப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது அதற்கு பலரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர்.
எனவே, இந்த தேசிய அரசாங்கத்திலாவது காணி மற்றும் வீடு உள்ளிட்ட வன்னி முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு வன்னி தெரிவான இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மாத்திரமின்றி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்பாகும். இதில் பெரியவன், சிறியவன் என்ற வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடாது.
இந்த விடயத்தில் இரு சமூகங்களையும் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கருத்து முரண்பாடுகளை களைந்து மக்களின் நலனுக்காக ஒற்றுமையாக அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் வன்னி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆசையாகும்.