600 மில்லியன் பணத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக மஹிந்தவின் செயலாளருக்கு எதிராக வழக்கு...!

முறையற்ற வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவி;ன் 600 மில்லியன் பணத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த பணத்தை இருவரும் பௌத்த அடியார்களின் வழிபாடுகளுக்காக செலவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்த இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரொஜினி வீரரட்ன தீர்மானித்துள்ளார்.

இந்த வழக்கில் தேர்தல்கள் ஆணையாளர் உட்பட்ட 21 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் இந்த தொகை பணம் தப்ரோபென் இலங்கை வங்கி கிளையில் உள்ள ஜனாதிபதி செயலாளரின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -