சுஹாறா முன்பள்ளி மற்றும் கல்வி நிலையத்தின் பாலர் வகுப்பு மாணவர்களின் விளையாட்டுப்போட்டி!

பைஷல் இஸ்மாயில் –

சுஹாறா முன்பள்ளி மற்றும் கல்வி நிலையத்தின் பாலர் வகுப்பு மாணவர்களின் 2015 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப்போட்டியில் றூபி இல்லம் 52 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

கல்வி நிலையத்தின் பணிப்பாளர் குசும் மதுரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த இல்ல விளையாட்டுப்போட்டி அட்டாளைச்சேனை அல் அர்ஹம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (19) இடம்பெற்றது.

இந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் இடம்பெற்ற ஓட்டப்போட்டி, பிஸ்கட் சாப்பிடல், பனிஸ் சாப்பிடல், சுரட்டைக்கால் மூலம் நடத்தல், கரண்டியில் தேசிக்காய் வைத்து நடத்தல், கண் கட்டியவருக்கு யோக்கட் ஊட்டுதல், குளிர்பானம் அருந்திவிட்டு ஓடுதல், பழவகைகள் தெரிந்தெடுத்து ஓடுதல், சங்கிலி கதிரை, முட்டி உடைத்தல் போன்ற நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது.

இப்போட்டிகளில் றூபி இல்லத்தைச் சேர்ந்த நிலாமுடீன் அபாத் என்ற மாணவன் நான்கு போட்டிகளில் விளையாடி முதலிடத்தைபெற்று அவரின் இல்லத்துக்கு 20 புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததன் மூலம் அந்த இல்லத்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல காரணமாக அமைந்தார். அத்தடன் றஜி, முஸக்றப், பாத்திமா ஹயா, அத்னான் மற்றும் சனூஸ் ஆகிய மாணவர்கள் இணைந்து 32 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர்.

இதனால் றூபி இல்லம் மொத்தமாக 52 புள்ளிகளைப்பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலாமிடத்தைப்பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

எமரல்ட் இல்லத்தைச் சேர்ந்த முஹம்மட் றஸாதி என்ற மாணவன் இரண்டு போட்டிகளில் விளையாடி முதலிடத்தைபெற்று அவரின் இல்லத்துக்கு 10 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். அத்தடன் சுஹா, அனோபா மற்றும் ரீஸா ஆகிய மாணவர்கள் இணைந்து 28 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர்.

இதில் எமரல்ட் இல்லம் மொத்தமாக 38 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது.

றூபி இல்லத்துக்கு 20 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்த  நிலாமுடீன் அபாத் என்ற மாணவனுக்கும், எமரல்ட் இல்லத்துக்கு 10 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்த முஹம்மட் றஸாதி என்ற மாணவனுக்குரிய சான்றிதழ் மற்றும் கிண்ணத்தையும் இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கி வைத்தார்.

அத்துடன் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையின் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.நபீல், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.அப்துல் பத்தாஹ், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக ஆரம்ப பிரிவின் இணைப்பாளர் ஆசிரியர் ஏ.எல்.பாயிஸ், விஷேட அதிதிகளாக இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஆணையாரும் அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டு கழக சம்மேளனத்தின் தலைவருமான எ.எச்.ஹம்ஸா சனூஸ், அல் அர்ஹம் பாடசாலை அதிபர் அன்சார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

கௌரவ அதிதிகளில் ஒருவரான அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையின் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.நபீலினால் இந்த விளையாட்டிப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -