இஸ்லாமிய மாநாட்டு மேடையில் மேலாடையின்றி ஏறிய 2 இளம்பெண்களை அடித்து நொறுக்கிய மக்கள்-வீடியோ
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய மாநாடு நடைப்பெற்ற மேடை மீது திடீரென இரண்டு பெண்கள் நிர்வாணமாக நுழைந்து கோசங்கள் எழுப்பியதால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸிற்கு மேற்கு பகுதியில் Pontoise என்ற நகர் அமைத்துள்ளது. இந்த பகுதியில் நேற்று இஸ்லாமியர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு மாநாடு ஒன்று நடைப்பெற்றுள்ளது. எண்ணற்ற இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் குழுமி இருந்த இந்த கூட்டத்தில் திடீரென இரண்டு பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நுழைந்துள்ளனர். மேடை மீது ஏறிய அந்த இரண்டு பெண்களின் மார்புகளில் ‘Nobody makes me submit’ ( யாரும் என்னை சரணடைய வைக்க முடியாது) என்ற எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன. 25 மற்றும் 31 வயதுடைய அந்த பெண்களின் அத்துமீறிய செயல்பாடுகள் அரங்கில் கூடியிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேடையில் பேசிக்கொண்டிந்த 2 இஸ்லாமிய நிர்வாகிகள் என்ன செய்வதென அறியாமல் நிலைகுலைந்து நின்றுள்ளனர். இந்நிலையில், மேடையில் ஏறிய காவலர் ஒருவர் அந்த இரண்டு பெண்களையும் வெளியேற்ற முயற்சி செய்துள்ளார். இருவரையும் அவரால் சமாளிக்க முடியாததால், அரங்கில் இருந்த சில ஆண்கள் எழுந்து சென்று அந்த இரண்டு பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றுள்ளனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், இரண்டு பெண்களில் ஒருவரை எட்டி உதைத்து வெளியே கொண்டு சென்று வீசியுள்ளார். சிறிது நேர பரபரப்பிற்கு பின்னர், கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களின் ஆலோசனை கூட்டத்தில் திடீரென அரை நிர்வாணமாக நுழைந்த பெண்கள் குறித்து எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், உக்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்டு தற்போது பாரீஸில் செயல்பட்டு வரும் Femen என்ற பெண்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொலிசார் கருதியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
