தொடந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும் பங்கினையாற்றியவரும், இதுவரை கட்சிக்காக குரல் கொடுத்து அம்பாரையில் 33,000 வாக்குகள பெறுவதற்கு கட்சிக்கு வழிகாட்டியவருமான வை.எல்.எஸ். ஹமீதுக்கு தேசியப்பட்டியல் வழங்காமை மிகவும் கண்டிக்கத் தக்க விடையம். அதுமாத்திரமன்றி இன்று அக்கட்சியில் அரசியல் ஆற்றலும், ஆளுமையும், சிறப்புத் திறமையும் உள்ள ஒருவர் என்றால் அது செயலாளர் நாயகம் ஹமீத் என்பதும், அவர் பாராளுமன்றம் சென்றால் ரிஷாத்தின் அந்தஷ்து குறைந்து விடும் என்றும் நினைத்து தேசியப்பட்டியலை வேறொருவருக்கு வழங்கியிருப்பது றிஷாத் தன்னைக் கேவலப்படுத்திய பெரும் பொய்யர் என்பதைக் காட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த அதே தவறை இன்று றிஷாத் பதியுதீன் செய்துள்ளமை ஹக்கீமை விடவும் றிஷாத் தேசிய ரீதியில் ஏமாற்றுவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று தெரிவித்தார்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அந்த கட்சியின் செயலாளரை மதித்து மூன்று முறை தேசியப்பட்டியல் கொடுத்து அலங்கரித்துள்ளார்.
ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் மூன்று முறையும் பொய் சொல்லி கட்சியின் செயலாளரை ஏமாற்றியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.