வாக்குறுதி தவறிய ஐக்கிய தேசியக் கட்சி - மறந்தது சிலரை

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

டந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி சார்பாக இரு முஸ்லிம் முக்கியஸ்தர்களான அசாத்சாலி மற்றம் முன்னாள் சிறந்த அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருக்கு தேசியப் பட்டியலில் இடந் தருவதாகக் கூறி தற்போது அதனை வழங்க மறுத்துள்ளமை முழு முஸ்லிம் சமுகத்தினையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

குறிப்பாக மஹிந்த அராஜகத்தில் இனவாதம் தலைதூக்கி இஸ்லாத்தை அழிக்கத்துடித்த வன்முறையாளர்களை எதிர்த்து இஸ்லாத்தின் தனித்துவத்தை காக்க உயிரையும் துச்சமென மதித்து இஸ்லாத்திற்காக குரல் கொடுத்த வெற்றி வீரன்தான் மத்தியமாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியாகும்.

அரசியல் முதிர்ச்சி பெற்ற பல அரசியல் வாதிகள் இருந்தும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காத இக்கால அரசியல் களத்தில் இஸ்லாத்திற்காக துனிச்சலுடன் அவர்களால் முடியாத விடயங்களை தனித்து நின்று போராடிய அசாத்காலிக்கு இலங்கையில் எப்பாகத்தில் வாக்குக் கேட்டாலும் அள்ளி வழங்க மக்கள் தயாராக இருக்கும் நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் களத்தில் இறங்கச் சென்றவரை ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியலில் இடந்தருவதாகக் கூறி அவரை அதிலிருந்து விலக்கியமை சமுகத்தில் பாரியதொரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்து ஐக்கிய தேசியக் கட்சி வென்றபோதும் தேசியப் பட்டியலில் இருந்து அவரை நீக்கி அசாத்சாலிக்கு அளித்த வாக்குறுதியை நயவஞ்சகத்தனம் செய்த ஐக்கிய தேசியக் கட்சி மீது முஸ்லிம் சமுத்தை வெறுப்படைய வைத்துள்ளது.

மக்கள் மனங்களில் வெற்றி கொண்ட ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி செய்த மாபெரும் தவறை மக்கள் எந்தக் காரணத்தைச் சொல்லியும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பது மக்களின் கருத்துக்களில் இருந்து அறிய முடிகின்றது.

அசாத்காலி போன்ற துனிச்சல் மிக்கவர்களை வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்வது எந்தவிதத்திலும் நியாயமான விடயமல்ல. இந்த வகையில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரம சிங்க இந்த விடயத்தில் அதீத கவனஞ் செலுத்தி அவருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே முஸ்லிம் சமுகத்தின் ஒட.;டுமொத்த வேண்டுகோல் ஆகும்.

இந்த விடயம் சுட்டிக்காட்டிய பின்னரும் அதனை சீர்செய்ய பிரதமர் முன்வரா விட்டால் அது எதிர் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னைய நிலைகைளின் நிலையும் ஏற்படலாம் என முஸ்லிம் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களால் விரும்பப்பட்ட ஒருவருக்கு அளித்த வாக்குறுதியை வழங்க மறுப்பது மக்களுக்கு செய்யும் ஒரு பாரிய துரோகமாகவே மக்கள் நோக்குகின்றனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை பாராளுமன்றத்திற்கு உள்வாங்காமல் சும்மா இருந்து விட்டு வருபவர்களால் என்ன பயன்?

இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் நேரத்தில் தலையிடா விட்டால் ஏதோ ஒருவகையில் அவர் தேர்தல் களத்தில் இறங்கி இன்று அவர் வெற்றி பெற்று ஒரு தனித்துவமானவராக மக்காளல் அமோக ஆதரவு வழங்கப்பட்ட ஒருவராக திகழ்ந்திருப்பார். 

ஆனால் அவருக்குள்ள ஆதரவை தமது கட்சியைச் சார்ந்தவர்கள் வரவேண்டும் என்பதற்காக தடுத்து தற்போது அவரை ஓரங்கட்டியிருப்பது ஜனநாயக மீறல்களாகவே மக்கள் நோக்குகின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் அசாத்சாலிக்கு தனித்துவமான மக்கள் ஆரவு இருப்பதை யாவரும் அறிவர் இந்த வகையில் அவர் தேர்தல் கேட்டாலுமோ கேட்கா விட்டாலுமோ அவர் வெற்றி பெற்ற ஒருவர்தான் என்பதே உண்மை நிலைமைகள்.

சமுக நலன்களுக்காக துனிச்சலாக முன்வருபவர்களுக்கு என்றுமே மக்கள் ஆதரவு இருக்கும் என்பதில் ஐயமில்லை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள அசாத்சாலியின் கடந்தகால தேர்தல் வெற்றிகள் கோடிட்டுக்காட்டுகின்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -