எம்.ரீ.எம்.பாரிஸ்-
அகில இங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் தொடர்பில் YLS. ஹமீட் அவர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்டஇளைஞர் அமைப்பாளர் MJ முஹம்மத் அன்வர் அவா்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை
இலங்கை முஸ்லீம்களின் அரசியல் வரலாற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வருகை பெரிதும் சிறுபான்மை மக்களினால் ஆகர்சிக்கப்படுகின்ற ஒரு நல்ல தருணத்தில் எமது செயலாளர் நாயகம் YLS. ஹமீட் அவர்களின் பொறுப்பற்ற முறையிலான ஊடகச் செய்திகளை வழங்கி இருப்பதானது, அவரைப்பற்றிய பிழையான அபிப்பிராயத்திற்கு வழிவகுத்துள்ளது.
தேசியப்பட்டியல் ஆசனம் எதற்காக வழங்கப்படுகின்றது என்பதை மறந்து, தனியே தனிநபர் செல்வாக்கிற்காகவும், பிரதேசவாதத்திகாகவும் அதனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் தலைமைகளிடையே, மக்களின் தேவையறிந்து, சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களின் முன்னிலை அடிப்படையில் எமது தலைமை எடுத்துள்ள முடிவானது சகல மக்களாலும், கட்சியின் ஆதரவாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி, மக்களின் நலன்குறித்து, தேவைகளை வென்றெடுக்க வேண்டிய நல்ல பயணத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதுர்தீன் பா.உ அவர்களுடன் கைகோர்த்து எமது தவிசாளர் கௌரவ அமீர் அலி பா. உ அவர்களும் செயல்படும் விதமும், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் மக்கள் அளித்துள்ள ஆணையும், இன, மத, பிரதேச பேதமற்ற நல்ல அரசியலுக்கு வழிவகுத்துள்ளது
இந்நிலையில் செயலாளர் நாயகம், தேசியத் தலைவர் ரிஸாத் மீது மட்டரகமான கருத்துக்களை வெளியிடுவது எமது கட்சியையும், அதன் போராளிகளையும் அவமதிக்கின்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது. மறைந்த பெரும் தலைவர் அவர்களின் பாசறையில் வளர்ந்த செயலாளர் நாயகம் அவர்கள் கட்சி தொடர்பாகவும், தலைமை தொடர்பாகவும் வெளியிடும் கருத்துக்கள் அவரின் அரசியல் அனுபவம் மாற்றும் நுணுக்கங்கள் பற்றிய தகுதியை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளையும், அதன் சாதக பாதகங்களும் செயலாளர் நாயகம் என்ற பதவிக்கான பொருத்தப்பாடும் போராளிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகின்ற அதே வேளை சீற்றமடையவும் செய்துள்ளது.
அன்புள்ள செயலாளர் YLS ஹமீட் அவர்களே புத்தளத்தின் சமூக அரசியல் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள தலைமையின் முடிவு பெரிதும் வரவேற்க கூடியது. இந்நிலையில் செயாளர் அவர்கள் தமது நிலையில் இருந்து பின் வாங்குவதுடன், தலைமைக்கு ஆதரவாகவும் செயற்படல் அவசியமாகும்.
இந்நிலையில் இலங்கைச் சிறுபான்மை அரசியலில் புதிய நாமம் கொண்டு செயல்பட்டு வரும் எமது தேசியத்தலைமைக்கும், அதன் சமூக நலன் சார்ந்த முடிவுகளுக்கும் கிழக்கு மக்களும், விசேடமாக இளம் சமூகத்தினரும் என்றென்றும் துணை நிற்க திட சங்கற்பம் பூண்டுள்ளோம் என்பதுடன் கிழக்கில் ஏற்படும் மக்களுக்கான விடியலில் கை கோர்க்க அனைவரும் அணி திரண்டுள்ளோம் என்பதையும் அறிவிக்கின்றோம்.
MJ முஹம்மத் அன்வர்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளர்
(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)