இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பிக்குகளில் ஒருவரேனும் தெரிவாகவில்லை.
புதிய நாடாளுமன்றிற்கு பிரவேசிக்க பிக்குகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
புதிய நாடாளுமன்றில் பத்து ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம் என போட்டியிட்ட பொதுபல பெரமுன கட்சியினால் கூட ஓரு ஆசனத்தை வென்றெடுக்க முடியவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அதுரலிய ரதன தேரர் மற்றும் ஒமல்பே சோபித தேரர் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பெயரிடப்படுவார்களா என்பதில் சந்தேகம் நிலவி வருகின்றது.
