15 வருடங்களுக்கு முன்னர் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த குமார் சங்கக்கார இன்று (20) ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 12350 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரா்கள் வரிசையில் உலகில் 05 ஆவது இடத்திலுள்ள குமார் சங்கக்கார இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார இன்று (20) தன்னுடைய 134 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
