செய்தியாளர்- அபு அலா –
சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ள அல்லி முல்லை பிரதான சந்தியில் பிரதான வீதியில் இன்று காலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் உளவு இயந்திர சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.
கல்முனை நோக்கி வந்த உழவு இயந்திரமூம், அக்கரைப்பற்று நோக்கி கோழி ஏற்றி வந்த வடி வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனயீனம் காரணமாக எதிரே கோழி ஏற்றி வந்த வடி வாகனத்தை கண்டதனால் சாரதிக்கு உண்டான பதட்ட நிலையே இந்த விபத்துக்கு காரணம் எனவும் இந்த பாரிய விபத்தினால் உழவு இயந்திர சாரதி மயிரிலையில் உயிர் தப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



