தேசிய அரசாங்கத்தினை மாகாண சபைகளுக்குள்ளும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஐ.தே.க

தேசிய அரசாங்கம் குறித்த சிந்தனை மாகாண சபைகளுக்குள்ளும் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முதலமைச்சராகவுள்ள மாகாண சபைகளின் ஆட்சியைக் கவிழ்த்து புதிய ஆட்சி மாற்றம் செய்வதனைவிட அம்மாகாணங்களின் அமைச்சுப்பதவிகளை பகிர்ந்து அரசாங்கத்தைப் பலப்படுத்துவது சிறந்தது என அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க இதன் மூலம் முடியுமாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இது குறித்து விரிவாக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டுள்ளது. (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -