இலங்கையில் கொகாகோலா நிறுவனத்திற்கு மன்னிப்பு...!

ளனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அண்மையில் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீளவும் அனுமதிப்பத்திரத்தை வழங்க சுற்றாடல் அதிகார சபை இன்று தீர்மானித்துள்ளது.

இவ்வாறான தவறுகள் மீள இழைக்கப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய காரணத்தினால் தற்காலிக அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

சுற்றாடலை மாசுப்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுவல பிரதேசத்தில் அமைந்துள்ள கொகாகோலா நிறுவனத்தின் நிலக்கீழ் குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் களனி கங்கை நீரில் எண்ணைக் கழிவு கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -