பாலமுனையில் இளைஞர் ஒருவரை கடத்த முயற்சி : பொதுமக்களினால் தப்பினார் இளைஞர்

அபு மனீஹா-

பாலமுனை 1ஆம் பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி பொது மக்களின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்ட சம்பவமொன்று வெள்ளிக்கிழமை (21) இரவு பாலமுனையில் இடம்பெற்றுள்ளது.

பாலமுனை 1ஆம் பிரிவில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க மேற் குறித்த இளைஞர் இஷா தொழுகை முடிததுக் கொண்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அதே பிரிவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறித்த இளைஞரின் வீட்டுக்கு வந்து ஆட்டோவில் பலவந்தமாக அழைத்துச்சென்று இருள் சூழ்ந்த வீதிக்கு அருகாமையில் ஆட்டோ நிறுத்தப்பட்டு கும்பல் ஒன்றினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட எத்தனித்த வேளையில் எதர்ச்சையாக அதே வீதியால வந்து கொண்டிருந்த நபரொருவர் இந்த சம்பவத்தினை கண்டு பொதுமக்களின் உதவியை நாடிய வேளையில் பொது மக்கள் குறித்த இடத்தில் ஒன்று கூடிய வேளையில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டு தாக்குதல் முயற்சி மேற்கொள்ள எத்தனித்த கும்பல் தாக்குதல் முயற்சியை கைவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.இதனால் கடத்தப்பட்ட இளைஞர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்;

குறித்த இளைஞரை பலவந்தமாக கட்த்திச் சென்று தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட கும்பலிலுள்ள ஒருவரின் புகைப்படம் பேஸ் புக்கில் (முக நூலில்) பதிவேற்றம் செய்யப்பட்டு கிண்டல் செய்ததாகவும் அந்த செயலுக்கு இவர்தான் காரணமாக இருக்கலாமென சந்தேகம் கொண்டு ஏற்கனவே குறித்த இளைஞரில் தமக்கு இருந்த தனிப்பட்ட கோபதாபம் காரணமாக இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட இருந்ததாக அறிய முடிகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக அதாவது கடத்தல் முயற்சியில் ஈடுபடக் காரணமாக இருந்த ஆட்டோ மற்றும் அதன் உரிமையாளர் பற்றி அக்கரைப்பற்று பொலிஸில' முறைப்பாடு செய்யப்பட்டு மேலதிக விசாரணையினை தற்போது அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாலமுனை பிரதேசம் சறிது நேரம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டு பதட்ட நிலை உருவாகி இருந்தமை குறிப்படத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -