புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போவோர் யார்?

வஜீஸாத் வஹாப்தீன்-

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் சொல்வதைச் செய்யும் கனவான் அரசியல்வாதி என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு தமது கட்சியின் தேசியப்பட்டியலில் இடம்வழங்கப்படாதென ஏற்கனவே அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைவாக‌ ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் தோல்வியடைந்தவர்களுக்கு இடம்வழங்கப்படவில்லை. 

அதேபோல் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பினும், தமது சொந்தத் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தால் அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படாதெனவும் பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஆளும் ஐக்கிய தேசியக் ​கட்சியின் பின்வரும் முக்கிய பிரமுகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், அவர்களது தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

  • விஜயதாச ராஜபக்ஷ- மஹரகம
  • சுஜீவ சேனசிங்க- கடுவெல
  • தயா கமகே- அம்பாறை
  • புத்திக பத்திரண- அக்குரஸ்ஸ
  • சாகல ரத்னாயக்க- தெனியாய
  • கயந்த கருணாதிலக- பெந்தர- எல்பிட்டிய
  • அஜித் பி. பெரேரா- பண்டாரகம
  • பாலித தெவரப்பெரும- புலத்சிங்ஹல
  • அருந்திக பெர்னாண்டோ- வென்னப்புவ
  • பாலித ரங்கே பண்டார ஆனமடுவ
  • சந்திராணி பண்டார- அனுராதபுரம் கிழக்கு
  • பி.ஹரிசன்- அனுராதபுரம் மேற்கு
  • ரஞ்சித் மத்தும பண்டார- மொனராகல
  • சஜித் பிரேமதாச- திஸ்ஸமஹராம
  • திலிப் வெதஆரச்சி- தங்காலை
  • தலதா அத்துக்கோரள- நிவித்திகல

இனி பிரதமர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? அல்லது வேறு அழுத்தங்கள் காரணமாகப் பணிந்து போவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -