மாகாணசபை உறுப்பினர் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன் - ஏ.எம். ஜெமீல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் கேட்காமலேயே தேசியப்பட்டியலுக்கு எனது பெயரை, தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரேரித்திருந்தார்.

எனினும், கட்சிப் பிரச்சினைகள் தொடர்பில் தலைமை என்னிடம் பேசியபோது தேசியப்பட்டியல் ஆசனத்தை நவவிக்கு விட்டுக்கொடுத்தேன்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மூன்று ஆசனங்களைப்பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸைவிட பின்னணியில் இருந்திருக்க வேண்டியவர்கள்.

அம்பாறையில், 12 மணியிலிருந்து 4 மணிவரை எமக்கு ஆசனம் கிடைக்கும் என தகவல் கிடைத்திருந்தது. இறுதி நேரத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எங்களிடம் ஆதாரம் உள்ளது.(newmu)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -