தாஜுதீன் கொலையாளிகள் இருவர் தப்பியோட்டம்….

கர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாஜூடின் கொலை தொடர்பில் சர்ச்சைகள் எழத் தொடங்கியுவுடன் இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை அறிந்து கொண்ட தாஜூடின் குடும்பத்தினர், சட்டத்தரணிகளை இத்தாலிக்கு அனுப்பி அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டியுள்ளனர்.

எங்கு தங்கியிருக்கின்றார்கள் எங்கு பணியாற்றுகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் திரட்டி அவற்றை சட்டத்தரணிகள், பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இத்தாலி செல்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதியொருவரது நண்பர் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -