கட்சியின் தலைமைக்கு உறுதுணையாக இருப்பதே உண்மையான கட்சிப் போராளியாகும்- விஜிந்தன்

ரஸீன் ரஸ்மின்-

வெற்றி தோல்விக்கு அப்பால் கட்சியின் தலைமைக்கு உறுதுணையாக இருப்பதே உண்மையான கட்சிப் போராளியாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான கமலநாதன் விஜிந்தன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குள் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து அவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பதவி என்பது ஒருவருடைய தனிப்பட்ட சொத்தல்ல. அது பொதுச்சொத்தாகும். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பலர் போட்டியிட்டோம். ஆனால், இறைவனின் நாட்டம், மக்களின் தெளிவான விளக்கம் என்பவற்றுக்கு அப்பால் ஒரு சிலர்தான் வெற்றி பெற்றார்கள்.

எமது கட்சிக்கு ஐக்கிய தேசியக்கட்சியால் வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்தை எல்லோருக்கும் தரவேண்டும் என்று தலமையுடன் முரண்படுவது கடசியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமல்ல.

எதிர்காலங்களில் மக்களுக்கு பல நல்ல பணிகளை தேர்தலில் வெற்றியடைய முயற்சிக்க வேண்டும். அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தiலைவருடன் முரண்படாது கட்சியுடன் பயணத்தை தொடர வேண்டும்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்கக்கு செய்யாத பணிகளை சாதாரன அமைச்சரின் இணைப்பாளராக இருந்து முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பல பணிகளை செய்திருக்கிறேன். அதுபோல தொடர்ந்தும் எஎனது பணிகள் அமைச்சருடன் தொடரும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அத்துடன், கட்சிக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தை புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர் நவவிக்கு வழங்கியதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -