வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சுப் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மங்கள சமரவீர மற்றும் விஜயதாச ஆகியோர் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் முறையே மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள்.டி.எம். சுவாமிநாதன் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
