அம்பாரை மாவட்டத்தில் அமைச்சு பதவிக்கான மும்முனைப்போட்டியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும்....!

மருதூர் மெய்யியலாளன்- ஏ.எல்.எம்.சபீக்-
ம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 03பேரும் 03 தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற்றுள்ளனர் இதில் பைசால் மற்றும் ஹரிஸ் இருவரும் பாராளுமன்றத்திற்கு பழையவர்கள் பைஸால் காசிம் முன்னாள் பிரதி அமைச்சர் மற்றயவர் மன்சுர் பாராளுமன்றத்திற்கு புதியவர் மாத்திரமன்றி துடிப்பானவரும் முன்னாள் மாகாண சபை அமைச்சரும் கூட.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டது எனினும் அதனுடன் தொடர்புபட்ட பதவி நிலைகள் இன்னும் நிறைவடையவில்லை எனபதால் வெற்றிபெற்ற அனைவரும் தங்கள் பரிவாரங்களுடன் தலைமைக்கு நெருக்குதல்கள் கொடுக்க கொழும்பில் முகாமிட்டு அதன் ஊடாக தங்கள் பதவிகளை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனினும் தலைமை சற்று நிதானமானது மாத்திரமன்றி அதன் முடிவை இறுதிவரை யாரும் அறிந்து கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை கடந்த கால பதவி வழங்கல்களைக்கொண்டு சிறுபிள்ளையும் அறியும். 

உண்மையில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட அனைவரது வெற்றியும் தலைமையினதும் மற்றும் ஜ.தே.க. தலைமையினதும் பிரச்சாரத்திலும் வாக்குறுதியிலும் இறுதிவரை தங்கியிருந்ததை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் வரும் வரை இருந்து வந்த கள நிலைமையினையும் இருவரும் வந்த பின்னர் ஏற்பட்ட மாற்றமான களநிலவரத்திலிருந்தும் ஒப்பிட்டு காணக் கூடியதாக இருந்தது என்பது தெட்டத்தெளிவு.

அதுவரை இருந்த களநநிலையினைக்கொண்டு அராய்ந்து பார்த்தால் எவ்வாறு இக்கட்சியில் வெற்றி பெற்றவர்களின் ஆளுமை இருந்தது என்பதை அறியலாம். ஆனால் அமைச்சு பதவி என வந்ததும் தங்களை தானைத்தளபதிகளாகவும் ஆளுமை மிக்கவர்கள் என்றும் காண்பிக்க முற்பட்டு; ஆளணிகளை கொண்டு வந்து தலைமைக்கு அளுத்தம் கொடுக்கலாம் என எண்ணினால் மூவரையும் வெல்ல வைத்த தலைமை இது கூட புரியாததல்ல இவ்வாறுதான் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கல்முனை மாகாண சபை உறுப்பினர்; நடந்துகொண்டார் தோல்வியும் கண்டார்.

எனினும் இதில் ஒரு விடயம் மறைந்துள்ளது அதாவது தலைமை யாருக்கு அமைச்சு பதவி என்பதை மிக சூசகமாக சொல்லியும் உள்ளது அதாவது விருப்பு வாக்கு குறைவாக பெறுபவர்க்கே அது என்பதாக. எனினும் அதனை இறுதி முடிவாக கொள்ளவும் முடியாது.

அடுத்த விடயம் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சேவை செய்யாதவர்களால் மக்கள் மத்தியில் ஒரு இடைவெளி ஏற்பட்டது இது மாற்று கட்சிகளால் பிரச்சாரமாக மாறி அதிக சவாலாக உருப்பெற்றது இதுவும் கருத்தில் கொள்ளப்படுவதோடு. 

அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில் முதல் மருதமுனை வரை பெரிய ஆதரவு தளம் எது என்பதையும், சவால்கள் நிறைந்த தொகுதி எது என்பதையும் தலைமை கருத்திலெடுக்க வேண்டும்;;;; மற்றும் அதிகமான வாக்காளர்களைக்கொண்ட தொகுதி, மக்களின் விருப்பம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸுக்கு சவால் கொடுக்கக்கூடிய மக்களின் மனங்களை கடந்த காலத்தில் வென்ற செயல்வாதி, துடிப்புள்ளவர்,; முன்னர் அமைச்சுப்பதவியை அலங்கரித்தவர்,

மக்களின் வேண்டுதலை செவிமடுத்தவர், ஊழலற்றவர் ஜனரஞ்சகமானவர், என்பன போன்ற பல விடயங்களைக் கருதியே தலைமை இந்த அமைச்சு பதவியை வழங்க முன்வரலாம் மாறாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு யாதும் செய்யாமல் நித்திரையில் களித்து பதவியை அலங்கரித்தவர்கள் முன்னர் அமைச்சு பதவி கிடைக்கவில்லை எனவே அமைச்சு பதவி தாருங்கள் செய்து காட்டுகிறேன் என்று கோருபவரையும் கடந்த காலத்தில் கட்சிக்கு அசௌகரித்தை ஏற்படுத்தியவர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நன்கு அறிவதுடன் கருத்திலும் கொள்ளும்.

உண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் தெரிவு செய்யப்பட்ட மூவரில் யாருக்கு அமைச்சு பதவி என ஒரு வினாக்கொத்தை தயாரித்து மக்களிடம் கையளித்து வினாக்களுக்கான விடைகளை தொகுப்பாக தர முற்பட்டபோது அதற்காக கிடைத்த விடைகள் பின்வருமாறு அமைந்திருந்தன அவற்றை 01, 02, 03 என இடம் வழங்கி ஒழுங்குபடுத்தி வகைப்படுத்தினால் மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பெருமளவு செவிமடுத்தவர்; பைசால் காஸிம், மன்சூர் ஹரீஸ் எனவருகிறது மொழியைக் கையாளும் ஆளுமை பைசால் மன்சூர் ஹரிஸ் என வருகிறது, கவர்சிகரமாக ஆடையணியும் ஆளுமை யாருக்கும் இடம் வழங்கப்படவில்லை, கம்பிரமான அமைச்சருக்குரிய பார்வையும் துணிவும் நடையும் முதல் 

02 இடங்களை; மன்சுர் பைசால் பெற்றுக்கொள்கின்றனர், 03மிடத்தை ஹரிஸ் பெறுகிறார் 

மாவட்டத்திலுள்ள நிறுவனங்களை கையாளும் திறன் விடயத்தில் 01மிடத்தை மன்சுர் 02மிடத்தை பைசால் 03மிடத்தில் ஹரிஸ் எனவருகிறது.  தன்னிடமுள்ள செயற்திறனான ஆளனி விடயத்தில் பைசால் மன்சுர் முதலிரு இடங்களை பகிர்துகொண்டுள்ளனர் 03மிடம் ஹரிஸுக்கு கிடைத்துள்ளது. சமுகப்பபற்று விடயத்தில் ஹரிஸ் 01மிடம் மற்றவர்கள் அடுத்த இரண்டு இடங்களை பெற்றுளனர்.

கட்சிப்பற்று என்ற விடயத்தில் யாருக்கும் இடம் வழங்கப்படவில்லை(கருத்து கூற மறுப்பு) தன்னிடம் வருகின்ற மக்கள் விடயங்களை(problems) மிக விரைவான கையாண்டு தீர்வாக தருகின்ற வல்லமையில் முதலிரு இடங்களை பைசால் மற்றும் மன்சுர் பெறுகின்றனர் மூன்றாமிடத்தை ஹரிஸ் பெறுகின்றார் தீர்மானமெடுக்கும் திறன் விடயத்தில் மன்சுர் பைசால் முதலிரு இடங்களைப் பெறுகின்றார் மூன்றாமிடத்தை ஹரிஸ் பெறுகின்றார். 

வேலை நேரத்தில் கடுமையாக வேலை செய்யும் விடயத்தில் முதலிரு இடங்களை பைசால் மன்சுர் பெற்றுள்ள அதேவேளை மூன்றாமிடத்தை கரிஸ் பெறுகிறார். 

மக்கள் சந்திப்பை மிக இலகுவாக்கியுள்ளதில்; பைசால் முதலிடம்; மன்சுர் இரண்டாமிடம்; ஹரிஸுக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர் 

இறுதியாக மிக முக்கியமாக மக்களின் மனச்சாட்சியான விருப்பு வாக்கு(problems) விடயத்தில் முதலாமிடம் பைசாலிற்கும் அடுத்து 02மிடத்தில் ஹரிஸ் வந்துள்ள அதேவேளை 03ம் இடத்தில் மன்சுர் காணப்படுகிறார் மேற்சொன்ன 15 விடயங்களுடன் இவையெல்லாவற்றையும் இணைத்து அதற்கம் அப்பால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நன்கு கணக்கு போட்டு வைத்துள்ளது இவ்வாறான விடயங்களே தலைமைக்கு அமைச்சு பதவி வழங்கலில் செல்வாக்கு செலுத்தப்போகிறது.

மாறாக கொழும்பில் முகாமிட்டு இருப்பதோ தலைவரின் வீட்டின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோ ஊர் மக்களை அல்லது சில ஆதரவாளர்களை டயர் எரிப்புக்கு தூண்டிவிடுவதோ செல்வாக்கு செலுத்தாது தலைமையின் முடிவுக்கு முன்னால் இவைகள் எல்லாம் செல்லாக்காசாகி புஸ்வாணமாகிப்போகும் தலைமை இவற்றுக்கெல்லாம் செவிமடுக்காது செவிசாய்த்த வரலாறும் கிடையாது, பதவியும் வழங்காது அமைச்சு பதவி சரியானவருக்கே தலைமை வழங்கும் மாறாக யாரினதும் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட்டதாக அது அமையாது வழங்கவும் மாட்டாது இவ்வாறான ஒரு நிலையினை கடந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயத்தில் கண்டோம். எனவே அதுவரை அமைதி காப்போம் முற்றுகையினைத்தவிர்போம். 

மருதூர் மெய்யியலாளன்.
ஆக்கம் ஏ எல் எம் சபீக்( பீ ஏ.சிறப்பு);
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -