மு.கா.- UNP யுடன் , அதாவுல்லாஹ் - மஹிந்தவுடன், றிஷாட்- தனித்து போட்டி!

அவதானி (PT)-

பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ள நிலையில் அதாவுல்ல மகிந்த அணியில் களமிறங்கவுள்ளதாகவும் .அதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து குதிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் எம்பிக்களான ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் சம்மாந்துறை மாஹீர் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதற்கு முன்னளாள் அமைச்சர் தயாரத்ன தனது கடும் எதிர்ப்பை ரணில் விக்ரமசிங்கவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான எதிர்ப்புக்கு ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் தயாகமகேவும் உறுதுணையாக இருந்துள்ளமை தெரியவருகின்றது. எனினும் இருவர்களது கருத்தினை உடன் மறுதலித்துள்ளார் ரணில் விக்ரமசிங்க.

இதற்கமைய முகாவுக்கு இரண்டு ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாறு தயாகமகே விடுத்த வேண்டுகோளை ரணில் சாதகமாக எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் முகா – ஐ.தே.க. வுக்கிடையில் ஆசன ஒதுக்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. முகா ஐதேக கூட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள் தமது எதிர்ப்பினை மகஜர் மூலமாக கட்சித் தலைமையிடம் கையளிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய அறிய முடிகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மூவர் போட்டியிடும் பட்சத்தில் முன்னாள் எம்பிக்கள் இருவருடன் சேர்த்து சம்மாந்துறைத் தொகுதிக்கு மாஹீரை களமிறக்க கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான சம்மாந்துறை மன்ஸூர் தனது எதிர்ப்பினை கட்சித் தலைமையிடம் வெளிப்படுத்தியுமுள்ளார்.

மாகாண அமைச்சு , மாகாண சபை உறுப்புருமை இரண்டையும் இராஜிநாமா செய்தால் மட்டுமே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பேன் என இதன் போது ஹக்கீம் நிபந்தனை விதித்துள்ளார்.

அதன் படி மன்ஸூருக்கு அடுத்ததாக உள்ள மாஹீரை கிழக்கு மாகாண சபை உறுப்பினராக்குவதற்கும் கட்சித் தலைவர் ஹக்கீம், மன்ஸுரிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஹக்கீமின் இந்தப் பதிலால் சங்கடத்திற்கு உள்ளான மன்ஸூர், மாகாண அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்வதாகவும் உறுப்புருமையை இராஜிநாமா செய்யமாட்டேன் என ஹக்கீமிடம் குறிப்பிட்டுள்ளார்

எனினும் மன்ஸூரின் இந்தக் கருத்தையும் ரவூப் ஹக்கீம் தடாலடியாக மறுத்துள்ளார். அத்துடன் இரண்டையும் இராஜிநாhமா செய்துவிட்டு தான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் தமக்கு பிரதியமைச்சர் பதவி ஒன்றை தரவேண்டும் என மற்றுமொரு நிபந்தனையை மன்ஸூர் ஹக்கீமிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் முகா வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஆனால் இதில் எதிலும் நம்பிக்கை கொள்ளாத மன்ஸூரின் ஆதரவாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என மன்ஸூருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த அடிப்படையில் மாஹீரே 03 வது வேட்பாளராக முகா சார்பில் களமிறங்குவார் என உறுதியாக தெரியவருகின்றது. இதே வேளை தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மகிந்த அணியில் போட்டியிடவுள்ளார்.

இது தொடர்பில் மகிந்தவுடன் இறுதிப்பேச்சுவார்த்தையை நிறைவு செய்துமுள்ளார் என தேசிய காங்கிர பிரமுகர் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் ரிசாதின் அணி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் . கட்சி சார்பில் கல்முனையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப், தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உப பீடாதிபதி இஸ்மாயில் ஆகியோர் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் அட்டாளைச் சேனை ,இறக்காமம் பொத்துவில் ,மருதமுனை , மத்திய முகாம் ஆகிய ஊர்களையும் பிரதிநித்துவப்படுத்தியும் அ.இ.ம.கா சார்பான வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

இந்த வேளையில் தத்தமது கட்சி சார்பான வேட்பாளர்களை தீர்மானிக்கும் முக்கிய கட்சிக் கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளன. முகாவின் உயர்பீடக் கூட்டம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

அதேபோன்று தேசிய காங்கிரஸி;ன உயர்பீடக் கூட்டம் 03ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டிக் காட்டினர்- 

இது அவதானிப்பு மாத்திரமே!

இணைப்பு 2
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாவுல்லாஹ்வின் அணி ஜனாதிபதி மைத்திரியின் அணியில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிகின்றன.

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா அவர்களுக்கு இன்று இரவு 7.00 மணிக்கு சந்திக்குமாறு விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாக அதாவுல்லாஹ்வின் ஊடகப்பிரிவுகள் தகவல்களை வெளியிட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -