துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
துவாறகலையில் சிங்கள மக்களின் ஆதரவினால் பூத்துக் குலுங்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று சனிக் கிழமை (25-07-2015) காலை 10 மணியளவில் தெகியத்த கண்டியில் அமைந்துள்ள துவாறகல கிராமத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் களமிறங்கியுள்ள மூன்று வேட்பாளர்களினையும் ஆதரித்து தெகியத்த கண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ரணவீர திசாநாயக்க அவர்களின் தலைமையில் பெருந் திரளான சிங்கள மக்களின் பங்களிப்போடு நடைபெற்று முடிந்தது.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும், மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளர் அப்துல் ரவூப் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் விசேட உரையும் ஆற்றினர். இந் நிகழ்வில் உரையாற்றிய தெகியத்த கண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ரணவீர திசாநாயக்க இன மத பேதம் இன்றி அனைவரினையும் மு.காவின் மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்களுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் முஸ்லிம் காங்கிரசினால் இம் மக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள், தொழில் வாய்ப்புகளினையும் அம் மக்களுக்கு நினைவூட்டினார்.
இவ் உரையின் போது முஸ்லிம் காங்கிரஸ் இத்தனை சேவைகளினை எமக்காக செய்துள்ளதா? என்ற ஒரு ஆச்சரிய உணர்வினை சிங்கள மக்களிடையே அவதானிக்க முடிந்தது.
இக் கிராமமானது முஸ்லிம் காங்கிரஸினை அடையாளப்படுத்தும் கொடிகளால் மாத்திரம் அலங்கரிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வுகளினை நன்கு அவதானிக்கும் போது திகமடுள்ளவில் மு.கா 15 000 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் வாக்குகளினை பெறும் என ஆரூடம் தெரிவிக்கப்படுகிறது.இந் நிகழ்வினைத் தொடர்ந்து தெகியத்த கண்டியின் இன்னும் பல இடங்களில் கிளைக் காரியாலயாங்களின் அங்குரார்ப்பணம், பிரச்சாரக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




