பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் உடனடியாக மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமின்றி, கடந்த அரசாஙகத்தில் ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள், உறுப்பினர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
அதற்கமைய நிதி மோசடி விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் துறைகள் இதுவரையில் அந்நடவடிக்கைகளுக்கான கடித ஆவணங்கள் ஆயத்தப்படுத்துவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அத்துடன் தேர்தல் நிறைவடையும் வரையில் குற்றம் சுமத்தப்பட்டாலும் கைது செய்யக்கூடாதென குறித்த பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தளர்வான வழியில் மேற்கொள்ளப்படுவதனாலே ஜனாதிபதி இவ்வாறு வலுவான முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மோசடிக் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு நாடாளுமன்றத்தையும் அரசாங்க அதிகாரங்களையும் தூய்மையாக்குவதற்கும் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவருக்கும் அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்கு இடமளிக்க கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
