வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் மஹிந்த : குருணாகலில் போட்டி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபடியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றிற்குள் பிரவேசித்து பிரதமர் பதவியை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -