சம்மாந்துறை அரசியல் வரலாற்று ஏடுகளில் புதிய பக்கங்களைப் புரட்டுவதற்கான ஒன்று கூடல்!

எம்.வை.அமீர்-
ம்மாந்துறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஒன்றியத்தினால் சம்மாந்துறை அரசியல் வரலாற்று ஏடுகளில் புதிய பக்கங்களைப் புரட்டுவதற்கான ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும் இன்று (8) ஏ.ஏ.கபூர் தலைமையில் றுஸான் ஸ்ரூடியோ கட்டிட மேல் தளத்தில் நடைபெற்றது.

இதன்போது கட்சிபோராளிகள் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக மாத்திரமே எமது உருக்கான பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெறமுடியும் என பல்வேறு வகையில் வலிறுத்தினர் இதனை ஊர்மக்களும் அதிகமானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது வலியுருத்தி கூறப்பட்டது. ஆனாலும் கட்சியானது ஊர் மக்களால் ஏற்றுக்கொள்கின்ற பக்குவமான நிதானமான அல்லாஹ்வுக்கு பயந்த தலைமைத்துத்தை அபேட்சகராக நிறுத்தவேண்மேன பலரும் கருத்துவெளியிட்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்க கூடிய வாய்ப்பு மிக்க கிட்டியதாக இருந்தபோதும் தவறியமைக்கு காரணம் பொருத்தமான அபோட்சகர் நிறுத்தபடாமைதான் என பலரும் அங்கலாத்துக்கொண்டனர் அத்தகைய தவறு தற்போதை தேர்தலில் அபேட்சகருதான் இம்முறையும் முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறையின் பாராளுமன்ற அபோட்சகரக திணிக்குமேயனால் அது மீண்டும் சம்மாந்துறையின் பாராளுமன்ற பிரநிதிப்துவத்தை பறிக்கும் சூட்சியாகதான் அமையும்.

எனவேதான் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினறைப் பெற்றுக்கொடுப்பதற்கு காத்திரமான பங்களிப்புக்கள் அத்தனையும் வழங்குவதாக உறுதியாளித்திருககின்றது. அவ்வகையில் அத்தலைமைத்துவத்தில் முடிவுகளில் முழு நம்பிக்கை வைத்தவர்களாக கட்சி போராளிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதன்அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றியது.

01-சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்காக முழு பாடுபடுவது.
02- முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக மாத்திரமே ஊருக்கான பாராளுமன்ற உறுப்பினரை பெறமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுக்கின்றோம்.
03- முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறந்த சமூக பற்றுள்ள அல்லாஹ்வுக்கு பயப்படக் கூடிய சிறந்த தலைமைத்துவத்தை ஊருக்கு வழங்கி மகத்தாக அன்போடு அரவனக்க கூடியதாக இருக்கவேண்டும் அவ்வாறான தெரிவை கட்சியின் தேசியத் தலைவர் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
04- தலைவர் கட்சியின் அபேட்சகரை தெரிவு செய்யும் போது உலமா சபை, நம்பிக்கையாளர் சபை மற்றும் மஜ்லிஸ் அஷ்ஷீறா முக்கியேஸ்தர்களையும் ஆகியோர்களின் ஆலோசனை செய்ய வேண்டுமெவும் தீர்மாணிக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -