பாறுக் ஷிஹான்-
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.
பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் வீட்டில் காணாமல் போனர்களின் உறவினர்கள், இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் , வாழும் மக்கள், வேலையில்லா பட்டதாரிகள் , தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களின் மகஜர்களையும் பெற்றுக்கொண்டார்.








