சாய்ந்தமருதை மறக்கவில்லை: மு.கா. வழி தவறிச் செல்கின்றது - அதாவுல்லா

ம்­பாறை மாவட்­டத்தின் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை அமைத்துக் கொடுக்கும் கனவு இன்னும் கலைந்து விட வில்லை என முன்னாள் அமைச்­சரும் தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்லா தெரி­வித்தார். எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்கை தொடர்பில் அவ­ரிடம் கேட்ட போதே மேற்கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்றை அமைத்­துக்­கொள்ளும் சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கைகள், அபி­லா­ஷைகள் ஒரு­போதும் வீண்­போ­காது எனவும் தமக்­கான அர­சியல் அதி­காரம் கிடைத்­ததும் அது நிச்­சயம் நிறை­வேறும். மற்­று­மொரு சமூ­கத்­தையும் பிர­தே­சத்­தையும் பாதிக்­காத வகையில் தங்­களை தாங்­களே ஆள நினைப்­பதில் எந்­த­வி­த­மான தவறும் கிடை­யாது.

சனத்­தொகை மாற்­றத்­திற்கு ஏற்­ற­வாறு வளங்­களை பிரித்­துக்­கொ­டுத்து மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு புதிய சபை­களை உரு­வாக்­கு­வது காலத்தின் தேவை­யாகும். அந்த வகையில் கடந்த ஆட்­சிக்­கா­லத்தின் இறுதி நேரத்தில் சாய்ந்த மரு­துக்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு ஒப்­ப­மிட்­டி­ருந்த வேளை அதனை தடுப்­ப­தற்கு மு.கா தலைமை கடு­மை­யான பிர­யத்த­னங்­களை முன்­னெ­டுத்­தமை யாவரும் அறிந்த விடயமாகும். என­வேதான் சிலர் ஆளு­வ­தற்­கா­கவும் அர­சியல் பிழைப்பு நடத்­து­வ­தற்­கா­கவும் சமூ­கத்­தி­னது அல்­லது ஒரு பிர­தே­சத்­தி­னது உணர்­வு­க­ளிலும் அபி­லா­ஷைக­ளிலும் கொடூ­ர­மாக நடந்து கொண்டு வரு­கின்­றனர். ஒரு சமூ­கத்தின் பெயரை முன்­னி­றுத்திக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது சுயநலனுக்காக இன்று ஐ.தே.கட்சியின் ஒரு தொகுதியின் அமைப்­பா­ள­ராக ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலை­மைக்கு மாறி­யுள்ளார்.

கடந்த அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வை­யிலும் இருந்து தனது சமூ­கத்­திற்­கான எந்த பணி­க­ளையும் செய்­யாத இவர் தற்­போது இருக்­கின்ற புதிய அமைச்­ச­ர­வை­யிலும் எந்­த­வி­த­மான நன்­ம­திப்­பையும் பெற்­றி­ருக்­க­வில்லை. ஆனால் எங்­க­ளுக்கு கிடைத்த அர­சியல் அதி­கா­ரத்தை கொண்டு அர­சாங்­கத்தின் உச்ச கட்ட பயன்­களை சமூ­கத்­திற்கு வழங்­கி­யுள்ளோம். எமக்கு கிடைத்த எல்லா அமைச்­சுக்­க­ளையும் மிகவும் லாவ­க­மாக கசக்கி பிழிந்து அத்­தனை நன்­மை­க­ளையும் வழங்­கி­யி­ருந்தோம்.

அமைச்­ச­ர­வையில் நம்­மீது அர­சாங்­கத்­திற்கும் அர­சாங்­கத்தின் மீது நமக்கும் நம்­பிக்­கையும் கூட்­டுப்­பொ­றுப்பும் இருக்க வேண்டும். முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு­போதும் இவ்­வாறு இருந்­த­தில்லை. 

முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாப­கத்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ர­பினால் என்ன தேவைக்­காக அந்த இயக்கம் அமைக்­கப்­பட்­டதோ அவைகள் அனைத்­தி­லி­ருந்தும் முஸ்லிம் காங்­கிரஸ் வழி­த­வறிச் செல்­கின்­றது.

ரணில் விக்­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய கட்சி எனும் வாக­னத்தின் சார­தி­யாக இருக்கும் வரையில் தான் அந்த வாக­னத்தில் ஏற மாட்டேன் என்று அன்று மர்ஹூம் அஷ்ரப் கூறி­யி­ருந்தார். ஆனால் ரணிலின் கைப்பொம்மையாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியுள்ளது. 

இன்று புதிய ஜனாதிபதியை புகழ்ந்து வாழ்த்தும் ரவூப் ஹக்கீம் மிக விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அறிக்கைகளையும் அபாண்டங்களையும் விட்டு செயற்படுவார். இதனை மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -