மைத்திரி கட்சியில் போட்டி : மைத்திரியுடன் பேசிவிட்டோம் - ஹிஸ்புல்லாஹ்

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எதிர் வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பில மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவரிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

 எனது தலைமையிலான குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களை நேற்று(30.6.2015) சந்தித்து பேசியுள்ளோம். இதன் போது பல் விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு முன் வைத்துள்ளோம். இதில் முஸ்லிம்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் வேட்பாளர்ளுக்கான இட ஒதுக்கீடு உட்பட பல விடங்களை பேசியுள்ளோம்.

எனது தலைமையிலான குழுவிலுள்ளவர்களுக்கு மட்டக்களப்பு உட்பட பத்து மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு இட ஒதுக்கீட்டை இதன் போது கோரியுள்ளோம். இது தொடர்பில் எனது தலைமையிலான குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குமிடையில் ஒரு புரிந்துனர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

அந்த புரிந்துனர்வு உடன் படிக்கையை செய்ததன் பின்னர் நான் உட்பட எனது குழுவின் வேட்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பில் போட்டியிடுவோம்.

நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -