பௌசி பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டால்... சுத‌ந்திர‌ முன்ன‌ணி இன‌வாத‌க்க‌ட்சிய‌ல்ல‌ என்பதை நிரூபிக்க முடியும் -முபாற‌க்

எஸ்.அஷ்ரப்கான்-

சிரேஷ்ட அமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டால் அது இந்த‌ நாட்டின் மிக‌ப்பெரும் வ‌ர‌லாற்றுநிக‌ழ்வாக‌வும், ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணி இன‌வாத‌க்க‌ட்சிய‌ல்ல‌ என்ப‌தை நிரூபித்த‌தாக‌ முடியும் என‌ உல‌மாக‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி ‌ ஊட‌க‌வியாளரின் கேள்வி ஒன்றுக்கு ப‌தில‌ளிக்கையில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

இன்றைய‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளில் அமைச்ச‌ர் பௌசி அவ‌ர்க‌ளே சிரேஷ்ட‌மான‌வ‌ர் என்ப‌துட‌ன் ஆளுமை மிக்க‌ஒருவ‌ராவார். அந்த‌ வ‌கையில் அவ‌ர் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட‌ முழு த‌குதியும் உடைய‌வ‌ராவார். 

இந்த‌ நாட்டை பொறுத்த வ‌ரை ச‌க‌ல‌ ம‌தத்‌தின‌ரும் ச‌மான‌ம் என்றே அர‌சிய‌ல் சாச‌ன‌ம் சொல்கிற‌து. ந‌டை முறையில்அத‌ற்கு மாற்ற‌மான‌ செய‌ற்பாடுக‌ளே அதிக‌ம் காண‌ப்ப‌டுவ‌தால் இன‌ங்க‌ள் ம‌த்தியில் ச‌ந்தேக‌மும் அச்ச‌மும்காண‌ப்ப‌டுகிற‌து. இவ‌ற்றை தீர்க்கும் வ‌கையில் பிர‌தான‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ச‌க‌ல‌ துறைக‌ளிலும் இன‌ ரீதியாக‌இல்லாம‌ல் அரசிய‌ல் நிய‌ம‌ன‌ங்க‌ளை வ‌ழ‌ங்க‌ வேண்டும். அந்த‌ வ‌கையில் எதிர் வ‌ரும் தேசிய‌ அர‌சாங்க‌த்தின்பிர‌த‌ம‌ராக‌ அமைச்ச‌ர் பௌசி நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌து மிக‌ச்சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாக‌ முடியும்.

நாட்டில் இன‌வாத‌ம் ஒழிக்க‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌தொரு ந‌ல்லாட்சியை ஏற்ப‌டுத்த‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌டும் ஜ‌னாதிப‌திமைத்ரிபால‌ அவ‌ர்க‌ள் அமைச்ச‌ர் பௌசியை பிர‌த‌ம‌ராக‌ ஒரு வ‌ருட‌த்துக்கேனும் நிய‌மித்தால் அது ந‌ல்லாட்சியின்மிக‌ச்சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாக‌ இருக்கும் என்பதுடன் கடந்தகால ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கான பெரும் கௌரவமாகவும் இந்நடவடிக்கை அமையும் என‌வும் முபாற‌க் மௌல‌வி மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -