சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை முழுவதும் கண் சிகிச்சை முகாம் நடாத்த திட்டம்!

இக்பால் அலி-

லங்கையில் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன் இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின்(I I R O – SA) அனுசரணையுடன் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை முழுவதும் கண் சிகிச்சை முகாம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் 01-07-2015 நேற்று நடைபெற்றது.இந்தக் கலந்ரையாடலின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன , சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின் கண்காணிப்புக்குரிய பிரதிநிதி கலாநிதி முஹமட் சபா ஜுனைட், சுகாதார அமைச்சின் நோய் தடுப்புப் பிரிவுக்கான பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஏ எல். பரீட், இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான், இந்நிறுவனத்தின்அதிகாரி அஷ்ஷெய்க் தில்ஷாட் முஹமட் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கண் வைத்திய சிகிச்சையின் மூலம் கண்ணில் வெள்ளை படர்தல் மற்றும் கண் தொடர்பாக சிகிச்சைகள் யாவும் இலவசமாக இலங்கையிலுள்ள கண் சிகிச்சை நிபுணத்துவமிக்க வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவுள்ளது. முதன் கட்டமாக 500 பேரைத் தெரிவு செய்து நோன்பு கழித்து களுத்துறை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -