நிஸ்மி-
முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழும் சூழலை ஏற்படுத்தி நாட்டில் ஒரு முன்மாதிரியான மாகாணமாக அம்பாரை மாவட்டத்தை உருவாக்குவதே எனது முதற்பணி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் திகாமடுள்ள மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.
நேற்று (10) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் காணி நீர்ப்பாசன அமைச்சரின் இணைப்பாளருமான எம்.எம்.நிஸாம் அவர்களின் இல்லத்தில் எம்.எம்.நிஸாம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இப்தார் வைபவத்தில் கலந்து கொண்ட பின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் பொதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தயா கமகே அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில்: இன்று சிலர் என்னை ஒரு இனவாதியாகச் சித்தரிக்க முற்படுகின்றார்கள் நான் ஒரு இனவாதியல்ல. அம்பாரை மாவட்டத்தில் வாழும் மூவின மக்களும் ஒற்றுiயாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்பதற்கான கடுமையான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றேன்.
சுpலதினங்களுக்கு முன்னர் திருக்கோவிலில் நடைபெற்ற கூட்டமொன்றில் நான் பேசிய போது திருக்கோவில் வைத்திய சாலைக்கு ஒதுக்கிய நிதியை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலைக்கு மாற்றினார்கள் என்று நான் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன நான் அவ்வாறு கூறவில்லை.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின் அமையவுள்ள பாராளுமன்றம் சென்று ஒரு வருட காலத்தினுள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையை சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக மாற்றுவதோடு எமது மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் சகல வசதிகளும் கொண்டதாகவும் அபிவிருத்தி செய்வேன். நான் ஒருபோதும் இனவாதம் பேசவில்லை.
எதிர் காலத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தை எமது அக்கரைப்பற்று அமைப்பாளர் எம்.எம்.நிஸாம் அவர்களுடன் இணைந்து அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் காணி நீர்ப்பாசன அமைச்சரின் இணைப்பாளருமான எம்.எம்.நிஸாம் உரையாற்றுகையில்: கடந்த அரசு காலத்தில் பொத்துவிலில் காணி அபகரிக்கப்பட்டபோதும், பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டபோதும் அதற்கெதிராக குரல் கொடுத்தவர் தயா கமகே அவர்கள். அவர் இங்கு வந்தவுடன் என்னிடம் கூறினார் உங்களது மக்கள் என்னை இன்னும் முழுமையாக நம்பவில்லை என்று நினைக்கின்றேன். அவர்களிடம் கூறுங்கள் நான் இனவாதியல்ல. தேர்தல் முடிந்ததும் உங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வேன் என்று கூறுமாறு கூறினார். அவர் ஒரு இனவாதியல்ல என்று தெரிவித்தார்.
பட்டினப் பள்ளி வாயல் பேஷ் இமாம் ஐ.ஐயூப் அவர்களின் பயானுடன் ஆரம்பமான இவ் இப்தார் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் யூ.ஆதம் லெவ்வை, ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண இளம் ஊழியர் சங்க இணைப்பாளர் பொறியியலாளர் எஸ்.பர்ஸாத்கான், மௌலவி எம்.ஐ.இப்றாகீம், பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.



