ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
மட்டக்களப்பு மாவட்டமாக இருந்தாலும் சரி அது தேசிய ரீதியாக இருந்தாலும் சரி முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் திட்டமிட்டு, வியூகங்களை அமைத்து அதற்காக தங்களது நேரத்தினையும், பெருமதிமிக்க தங்களது கட்சியின் சமூக நோக்கங்களை வேறுபாதைக்கு மாற்றி அல்லாஹ்வும், பிரதேசங்களை பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற சமூகங்களும் பொருந்திக்கொள்ள முடியாதவாறு மாற்றுக் கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடிக்கும் முயற்சியினை கைவிட்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் தங்களின் கட்சி சார்பாக தேர்தல்களத்தில் இறக்கியுள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அல்- ஹாஜ் பசீர் செகுதாவூத் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அரசியல் தூரநோக்குடனான கருத்தாளமிக்க சிந்தனையுடன் வேண்டிக்கொண்டார்.
மேற்குறிப்பிட வேண்டுகோளினை கடந்த 17.07.2015 வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட கலந்துரையாடலில் இடம்பெற்ற அமளிதுமளிக்கு பிற்பாடு முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் வீட்டில் அவருடைய ஆதராவாளர்கள், முஸ்லிம் காங்கிரசின் மூத்த போரலிகள் மத்தியில் இடம்பெற்ற அமைதியான கலந்துரையாடலில் இவ்வாறானதொரு கருத்தாளமிக்கதும், தூரசிந்தனை நோக்குடையதான வேண்டுகோளினை முஸ்லிம் காங்ரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமிடம் சமர்பித்தமையானது அங்கிருந்த ஏனைய பிரதேச முஸ்லிம் காங்கிரசின் மூத்தபோராலிகளினதும், முக்கிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களினதும் உள்ளங்களை கொள்ளையடித்துச் செல்லும் நிதர்சன கருத்தாக காணப்பட்டதனை அவதானிக்கக்க்கூடியதாக இருந்தது.
மேலும் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசானது எப்பொழுதும் தனது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதனை இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு அதன்பால் கிடைக்கும் வெற்றியோடு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக அரசியல் செல்வாக்கு மிக்க கட்சியாக மாவட்டத்திலேயும் மாகாணத்திலேயும் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் இம்முறை கட்சியின்சார்பாக வேட்பாளராக களமிறக்குவதை தவிர்த்ததாகவும் கட்சியின் தலைமையிடத்தில் எல்லோரும் இருக்கதக்க முன்னிலையில் தெரிவித்த கருத்துக்களை அமைதியாக உள்வாங்கியவாறு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் விடைபெற்றுச் சென்றார்.
