அம்பலமானது ஶ்ரீரங்காவிற்கும் 'ரோ' உளவுப் பிரிவிற்கும் இடையிலான உறவு....?

லையகத்தில் பிரஜைகள் முன்னணி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள 11 பெண் வேட்பாளர்களுக்கு இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன் வாழ்த்து தெரிவித்துள்ளமை பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன.

ஶ்ரீரங்காவிற்கும், இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு காரணமாகவே, ரங்காவின் கட்சி வேட்பாளர்களுக்க இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்துள்ளளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரஜைகள் முன்னணி சார்பாக 11 பெண்களை ஶ்ரீரங்கா களமிறக்கிவிட்டு, அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதும் இந்தச் சந்தேகங்களை வலுக்கச் செய்கிறது.

இந்த நிலையில், மலையகத்தில் ரோ உளவுப் பிரிவின் பணிகளுக்கான ஶ்ரீரங்காவும் நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.

இந்தப் பொதுத் தேர்தலில் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 200 பேர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ரோ உளவுப் பிரிவிற்காக ஜே.ஶ்ரீரங்கா பணியாற்று வருவதும், இதனாலேயே ரங்காவின் கட்சிக்கு வாக்குகள் கிடைப்பதற்காக இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஒருவரே நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் இதுகுறித்து குறித்து எம்முடன் கலந்துரையாடிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை பிளவுபடுத்துவதற்கும் அந்நாட்களில் ஜே.ஶ்ரீரங்காவை இந்திய ரோ அமைப்பு பயன்படுத்தியதையும், அதற்கான சில ஆதாரங்களை குறித்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஒரு கட்சியின் வேட்பாளருக்கு வெளிநாட்டு தூதரக அதிகாரியொருவர் வாழ்த்து தெரிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஶ்ரீரங்காவிற்கும் ரோ உளவுப் பிரிவிற்கும் இடையிலான உறவு இதன்மூலம் அம்பலமாகியுள்ளதாக அந்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.

100 வீதம் பெண்களுக்கு இடமளித்துள்ளதாக ஶ்ரீரங்கா ஒரு விம்பத்தை ஏற்படுத்த முயற்சித்தாலும், அந்த அப்பாவி மலையகப் பெண்கள் ஶ்ரீரங்காவின் அரசியல் பகடைகளாக மாற்றியுள்ளதே உண்மை நிலையென்பது பரிதாபகரமான செய்தியாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -