ஜுனைட்.எம்.பஹ்த்-
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக தேர்தல் செயலகம் விசேட தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.
தமது முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது தொலைநகல் ஊடாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான தமது முறைப்பாடுகளை பொதுமக்கள்
011-2877631 ,2887756, 2887759 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 011 2877636 , 2887717, எனும் தொலை நகல்களுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பாக தேர்தல்கள் செயலகத்திற்கு முறைப்பாடு செய்யும் எல்லா சந்தர்ப் பங்களிலும் அத்தகைய முறைப்பாட்டை உரிய மாவட்டத்தின் மாவட்டச் செய லகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திற்குச் சமர்ப்பிக் குமாறும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பாக நேரடியாக உரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
தேர்தலுடன் தொடர்புடையதாயினும் நாட்டின் சாதாரண சட்டங்களை மீறுவது தொடர்பாக விசேடமாக குற்றங்களாக் கணிக்கப்படுகின்ற தவறுகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகளை சமர்பிக்குமாறும் தேர்தல் செயலகம் பொதுமக்களை கேட்டுள்ளது.
