க.கிஷாந்தன்-
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்றதேர்தல் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் 12.07.2015 அன்று பிற்பகல் அட்டன் இந்திரா மண்டபத்தில் இடம்பெற்றன.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொருளார் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, இராஜாராம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றின் தோட்ட தலைவர்கள்,தலைவிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் அழகமுத்து நந்தகுமார் இணைந்து கொண்டமை குறிப்பிடதக்கது.