சுலைமான் றாபி-
கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொது வெளி அமைப்பான அகர ஆயுதத்தின் 06வது அமர்வும் இப்தார் நிகழ்வும் இன்று (12.07.2015) நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் பிரதம பொறியியலாளரும், கலை இலக்கிய வட்டத்தின் செயலாளருமான அல் ஹாஜ் ரி.எல் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட மற்றும் வெளி இடங்களைச் சேர்ந்த கவிஞர்கள், இலக்கியவாதிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை இவ்விப்தார் நிகழ்வில் இரு மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த மற்றும் இளைய இலக்கிய வாதிகள் கலந்து சிறப்பித்தது சிறப்பம்சமாகும்.



