எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ( BMICH)) இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிமனையில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் N. அப்துல் வஹாப் அவர்கள் ஆசிரிய கல்வியியலில் முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.
போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு ( ளுடுநுயுளு ) தெரிவான பொத்துவிலைச் சேர்ந்த ஒரேயொரு நபர், இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்தில் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் இவர், நீதி அமைச்சினது மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும், பொத்துவில் மத்தியஸ்த சபையின் தவிசாளராகவும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
தனது கல்வியியல் துறை சார்பில் B A, PGDE, NDA, MATE,ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.