அகில இலங்கை மக்கள் காங்கிரஸிக்கு அம்பாறை மாவட்ட மக்களுடைய ஆதரவு நிச்சயம் கிடைக்கும்

பி.எம்.எம்.ஏ.காதர்-

டந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் மக்களுடைய உரிமைப் போராட்டம் என்பவற்றை பேச்சளவில் மாத்திரம் கொண்டிருக்கின்றது.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை வேட்பாளர் அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.

மருதமுனையில் திங்கள் கிழமை (20-07-2015)காலை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவத்தை பொறுத்தவரையில் அவர் பேச்சிலும், செயற்பாட்டிலும்; செயற் திறன்மிக்கவராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் கடந்த காலங்களில் அவர்களின் செயற்பாடுகளை மக்கள் முன்கொண்டு சென்றிருக்கின்றார்கள்.அந்த வகையிலே மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் மீது வகையிலே மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
ஆகையால் அம்பாறை மாவட்டத்தில் மக்களுடைய ஆதரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -