க.கிஷாந்தன்-
200 வருடம் பெருந்தோட்ட பகுதியில் நாட்டின் தேசிய வருமானத்திற்காக உழைத்து லயக்குடியிருப்பில் வாழ்ந்த மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவினால் முன்னெடுக்க 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுக்கோளுக்கினங்க இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கான வீடமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவுபெறும் தருவாயில் இருப்பதோடு மிகவிரைவில் சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு சகல வசதிகளையும் கொண்ட 7 பேர்ச் நிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் எவ்வித பணமும் அறவிடாமல் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்ற ஒரு வீட்டில் சமயலறை, விராந்தை, 2 படுக்கையறைகள், குளியலறை, மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதியுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது




