எஸ்.என்.எஸ்.றிஸ்லி -
நேற்று இரவு மோட்டார் சைக்கிளும் குபோட்டா வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
இது அட்டாளைச்சேனை தைக்கநகர் பிரதான வீதியில் இடம்பெற்றதாகவும் மோட்டார் சைக்கிளில் இரு இளைஞ்சர்கள் பயணித்ததாகவும் அதில் பின்னால் அமர்ந்து வந்த இளைஞன் விபத்து இடம்பெறும் போது சைக்கிளை விட்டு பாய்ந்து உயிர் தப்பியதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும் சைக்கில் ஓட்டிவந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அவரோடு வந்த மற்றைய இளைஞன் கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் விபத்தில் மரணமான இளைஞன் அட்டாளைச்சேனை தைக்கநகர் பிரதேசத்தைச்சேர்ந்த 23 வயதான பிர்னாஸ் ஆவார்.
